/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரேவதி மெடிக்கல் சென்டரில் மருத்துவ முகாம்: 400 பேர் பயன் ரேவதி மெடிக்கல் சென்டரில் மருத்துவ முகாம்: 400 பேர் பயன்
ரேவதி மெடிக்கல் சென்டரில் மருத்துவ முகாம்: 400 பேர் பயன்
ரேவதி மெடிக்கல் சென்டரில் மருத்துவ முகாம்: 400 பேர் பயன்
ரேவதி மெடிக்கல் சென்டரில் மருத்துவ முகாம்: 400 பேர் பயன்
ADDED : ஜூலை 14, 2024 11:22 PM

திருப்பூர்:திருப்பூர், ரேவதி மெடிக்கல் சென்டர் வளாகத்தில் கடந்த 12 முதல் நேற்று (14ம் தேதி) வரை சிறப்பு சர்க்கரை, ரத்த அழுத்தம், முதியோர் நலம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடந்தது. 3000 ரூபாய் மதிப்புள்ள சர்க்கரை, ரத்த, இருதய, கால் நரம்பு பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. பொது மற்றும் சர்க்கரை நோய் நிபுணர்கள் டாக்டர் சந்தோஷ், டாக்டர் அருண்குமார் ஆகியோர் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
ரேவதி மெடிக்கல் சென்டர் தலைவர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி கூறுகையில், ''திருப்பூர் மாவட்டத்தில் சர்க்கரை, ரத்த அழுத்த நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோயாளிகள் நலன் கருதி, சிறப்பு மருத்துவ முகாமை ஏற்பாடு செய்தோம். நானுாறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயன் பெற்றனர். சர்க்கரை, ரத்த அழுத்த நோயாளிகள் சரியான உணவுமுறை, லேசான உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். கட்டுக்குள் அடங்காத சர்க்கரை, ரத்த அழுத்த நோய் பல்வேறு நோய்களுக்குத் திறவுகோல்; பொதுமக்கள் வாழ்வியல் முறையை சரியாகப் பேண வேண்டும்'' என்றார்.