ADDED : ஜூன் 30, 2024 02:01 AM
திருப்பூர்;திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில், டெய்லராக பணிபுரிந்து வந்தவர், முருகன், 44. அவர் பணியில் இருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். நிறுவனம், அவரை இ.எஸ்.ஐ., திட்டத்தில் பதிவு செய்திருந்தது. அந்த உயிரிழப்பை, 'பணியின் போது ஏற்பட்ட உயிரிழப்பு' என, இ.எஸ்.ஐ., நிர்வாகம் அங்கீகரித்தது.இறந்த முருகனின் குடும்பத்தினருக்கு, இ.எஸ்.ஐ., வாயிலாக மாத உதவித் தொகை வழங்க, கோவை இ.எஸ்.ஐ., சார் மண்டல அலுவலகத்தின் துணை இயக்குனர் (கூடுதல் பொறுப்பு) விக்னேஷ் உத்தரவிட்டு, அதற்கான ஆணையை குடும்பத்தினரிடம் வழங்கினார். 'தினசரி, 270 ரூபாய் வீதம் கணக்கிட்டு, மாதம், 8,370 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்' எனவும் அவர் தெரிவித்தார்.
இ.எஸ்.ஐ., கோவை கே.என்.பி., புரம் கிளை மேலாளர் இந்திரலேகா மற்றும் அலுவலக ஊழியர்கள் உடனிருந்தனர்.