ADDED : ஜூன் 30, 2024 01:59 AM
திருப்பூர்;கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட போது, 'முந்தைய கல்வியாண்டின் பஸ் பாஸ் மாணவர் பயன்படுத்தலாம். பள்ளி சீருடையில் இருந்தால் மாணவர்கள் இலவசமாக பயணிக்க நடத்துனர்கள் அனுமதிக்க வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டது.
பள்ளிகள் திறந்து, மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில், பஸ் பாஸ் தேவைப்படும் மாணவ, மாணவியர் விபரங்களை வகுப்பு வாரியாக சேகரிக்கும் பணியை தலைமை ஆசிரியர்கள் துவங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த தகவல்கள், மண்டல போக்குவரத்து அலுவலகத்துக்கு பஸ் பாஸ் பயன்படுத்த உள்ளவர்களின் போட்டோவுடன் அனுப்பி வைக்கப்படும். ஜூலை, 10ம் தேதிக்குள் இப்பணியை முடிக்கும்படி, முதன்மை கல்வி அலுவலர் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.