Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஜவுளி கழிவு கொள்முதல் ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்பு

ஜவுளி கழிவு கொள்முதல் ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்பு

ஜவுளி கழிவு கொள்முதல் ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்பு

ஜவுளி கழிவு கொள்முதல் ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்பு

ADDED : ஜூன் 30, 2024 01:59 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்:ஜவுளி கழிவுகளை நல்ல விலைக்கு கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டுமென, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின், பிராண்டிங் மற்றும் பசுமை உற்பத்தி துணை குழு சார்பில், ஜவுளி கழிவு நிலை ஒழுங்குமுறை கண்காணித்தல், டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஐரோப்பாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும், 'ரிவர்ஸ் ரிசோர்சஸ்' நிறுவன முதன்மை செயல் அதிகாரி மரியஸ் கோல்டன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் ராஜ்குமார், பொதுசெயலாளர் திருக்குமரன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், இணை செயலாளர் குமார் துரைசாமி, துணை குழுவின் தலைவர் ஆனந்த், துணை தலைவர் மேழிசெல்வன், உறுப்பினர் சேர்க்கை தலைவர் சுப்பிரமணியம் துணை தலைவர் ரத்தினசாமி, செயற்குழு உறுப்பினர் இளங்கோ ஆகியோர் பேசினர்.

ஜவுளி கழிவு மறுசுழற்சி வழிகாட்டுதலில், 20 சங்க உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக, கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. வெளிநாடுகளில், ஜவுளி இறக்குமதி செய்ய, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சங்க உறுப்பினர்களிடம், ஜவுளி கழிவுகளை நல்ல விலைக்கு வாங்க ஏற்பாடு செய்தால், மேலும் பல உறுப்பினர்கள் இணைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

மறுசுழற்சி தொழில்நுட்பம் ரீதியான சேவைகளை, குறைந்த கட்டணத்தில் வழங்க வேண்டுமென, கோரிக்கை வைக்கப்பட்டது. தொடர்ந்து, 'ரிவர்ஸ் ரிசோர்சஸ்' நிறுவனம் சார்பில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்துக்கும், நிறுவனத்துடன் இணைந்துள்ள உறுப்பினர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

---

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின், பிராண்டிங் மற்றும் பசுமை உற்பத்தி துணை குழு சார்பில், ஜவுளி கழிவு நிலை ஒழுங்குமுறை கண்காணித்தல், டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us