ADDED : ஜூன் 30, 2024 01:09 AM
தாராபுரம், தாராபுரத்தில், செல்போன் திருடிய வாலிபரை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
தாராபுரம், கல்யாண ராமர் கோவில் பகுதியை சேர்ந்தவர் சரவணக்குமார், 45; கடந்த, 27ம் தேதி வீட்டில் தன்னுடைய இரு செல்போன்களை, சார்ஜ் போட்டுவிட்டு துாங்கினார். காலையில் பார்த்தபோது காணவில்லை. இதுகுறித்து தாராபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கிடைத்த அடையாளத்தை வைத்து ஆசாமியை தேடி வந்தனர். இதில் தாராபுரம், பஜனை மட தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் திருமூர்த்தி, 24, என்பது தெரிந்தது. வாலிபரை நேற்று கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தாராபுரம் சிறையில் அடைத்தனர்.