/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பேரனை ஏமாற்றி திருமணம் வேதனையில் தாத்தா விபரீதம்பேரனை ஏமாற்றி திருமணம் வேதனையில் தாத்தா விபரீதம்
பேரனை ஏமாற்றி திருமணம் வேதனையில் தாத்தா விபரீதம்
பேரனை ஏமாற்றி திருமணம் வேதனையில் தாத்தா விபரீதம்
பேரனை ஏமாற்றி திருமணம் வேதனையில் தாத்தா விபரீதம்
ADDED : ஜூன் 30, 2024 01:09 AM
தாராபுரம், தாராபுரம் அருகே, பேரனை ஏமாற்றி திருமணம் செய்ததாக கூறி, தாத்தா தற்கொலை செய்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியது.
தாராபுரத்தை அடுத்த மண்டல புதுாரை சேர்ந்தவர் கருப்புசாமி, 75; இவரின் பேரன் மகேஷ் அரவிந்த், 30; இவருக்கும் கரூரை சேர்ந்த சந்தியா, 30, என்பவருக்கும் சில தினங்களுக்கு முன், திருமணம் நடந்தது.
இந்நிலையில் சந்தியாவுக்கு ஏற்கனவே திருமணமான தகவல் கிடைக்கவே, மகேஷ் அரவிந்த் அதிர்ச்சி அடைந்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான, கருப்புசாமி நேற்று முன்தினம் மாலை மாயமானார். காணவில்லை. நேற்று காலை பக்கத்து தோட்டத்தில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து அலங்கியம் போலீசில், மகேஷ் அரவிந்த் புகாரளித்தார். அதில், சந்தியா தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தாத்தா தற்கொலை செய்து கொண்டார். எனவே சந்தியா மற்றும் அவரது தோழி தமிழ்ச்செல்வி மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அலங்கியம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.