Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஸ்ரீசரண் மருத்துவமனையில் சிறுநீரக சிறப்பு மருத்துவ பிரிவு

ஸ்ரீசரண் மருத்துவமனையில் சிறுநீரக சிறப்பு மருத்துவ பிரிவு

ஸ்ரீசரண் மருத்துவமனையில் சிறுநீரக சிறப்பு மருத்துவ பிரிவு

ஸ்ரீசரண் மருத்துவமனையில் சிறுநீரக சிறப்பு மருத்துவ பிரிவு

ADDED : ஜூலை 01, 2024 01:43 AM


Google News
உலக அளவில், 85 கோடிக்கும் அதிகமான மக்கள் சிறுநீரக செயல் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், 16 சதவீத மக்களுக்கு சிறுநீரக செயலிழப்பு பாதிப்பு ஏற்படுகிறது.

சிறுநீரகம் பாதித்தவர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போதிய நோய் தடுப்பு விழிப்புணர்வு இல்லாததாலும், ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் இல்லாததாலும், சிறுநீரக நோய் தாமதமாக கண்டறியப்படுகிறது. பொதுவாக, சிறுநீரக பாதிப்பு உள்ள 50 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள், 'ஸ்டேஜ் 5' என்ற தாமதமான நிலையில் தான் டாக்டர்களிடம் செல்கின்றனர்.

நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் காரணமாக சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது. கால் மற்றும் முகத்தில் வீக்கம், உயர் ரத்த அழுத்தம், சிறுநீர் நுரையாக வெளியேறுவது போன்ற அறிகுறி இருந்தாலும், சிறுநீரகப்பாதையில் அடிக்கடி கல் அல்லது தொற்று பாதிப்பு ஏற்படுவது, நீண்டகாலம் வலி நிவாரண மருந்து உட்கொண்டதாலும், சிறுநீரகம் பாதிக்க வாய்ப்புள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

போயம்பாளையம் ஸ்ரீசரண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பழனிசாமி கூறியதாவது:

புதிதாக துவங்கப்பட்டுள்ள டயாலிசிஸ் மையம், அனுபவம் வாய்ந்த சிறுநீரக டாக்டர்கள் கண்காணிப்பில், உலக தரத்துடன் கூடிய நவீன தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இருதயம், கல்லீரல், நுரையீரல் போன்ற இணை நோயுள்ளவர்களுக்கு, சிறப்பு டாக்டர்களால் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும், 24 x 7 என நாள் முழுவதும், தீவிர சிகிச்சைபிரிவுடன் கூடிய டாயாலிசிஸ் சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில், இலவச மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us