Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ காது கேட்கலையே கவலை வேண்டாம்

காது கேட்கலையே கவலை வேண்டாம்

காது கேட்கலையே கவலை வேண்டாம்

காது கேட்கலையே கவலை வேண்டாம்

ADDED : ஜூலை 01, 2024 01:42 AM


Google News
''காது கேட்கலையேங்கற கவலை இனி வேண்டாம்'' என நம்பிக்கையூட்டுகிறார், திருப்பூர் 'மெட் ெஹல்ப்' காது கேட்கும் கருவி விற்பனை நிறுவனத்தின் நிறுவனர் ராம் கார்த்திக்.

அவர் கூறியதாவது:

எங்கள் நிறுவனம் திருப்பூரை தலைமையிடமாக கொண்டு, கடந்த, 2014ல் துவங்கப்பட்டது. அவிநாசி, சூலுார், திருப்பூர், பழனி என, நான்கு கிளைகளுடன் செயல்படுகிறது.

பிறந்த குழந்தை முதல், அனைத்து வயதினருக்குமான காது கேட்கும் நவீன கருவிகளை தருவித்து வழங்குகிறோம். உடனடி பரிசோதனை செய்யும் கருவியும் எங்களிடம் உண்டு.

காது கேளாதோரை முழுமையாக பரிசோதித்து, தேவையான கருவிகளை வழங்குகிறோம். பேச முடியாத குழந்தைகளுக்கு பேச்சுப்பயிற்சி, பிரச்னை இருப்பின் குரல் வள பயிற்சி வழங்குகிறோம்.

ரோட்டரி உள்ளிட்ட தன்னார்வ அமைப்பினருடன் இணைந்து, 100க்கும் மேற்பட்டோருக்கு காது கேட்கும் கருவி வழங்கியுள்ளோம். இதுவரை, 250க்கும் மேற்பட்டோருக்கு காது பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு 99443 50949 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சிலர் காது கேட்கும் கருவி மற்றும் விற்பனை தொடர்பான கல்வியை படிக்காமலேயே, படித்தது போன்று பயிற்சி வழங்குகின்றனர். ஆர்.டி.ஐ., கவுன்சிலில் பதிவு செய்தவர்கள் மட்டுமே, பயிற்சி வழங்க வேண்டும் என்பது தான் விதிமுறை. நாங்கள் முறையாக பதிவு செய்து, பணி செய்து வருகிறோம்.

இவ்வாறு, டாக்டர் ராம் கார்த்திக் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us