/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மின் கட்டண உயர்வு மா.கம்யூ., ஆர்ப்பாட்டம் மின் கட்டண உயர்வு மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வு மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வு மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வு மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 27, 2024 12:08 AM

பல்லடம்;மின் கட்டண உயர்வை கண்டித்து, மா.கம்யூ., கட்சி சார்பில் பல்லடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றிய குழு உறுப்பினர் பழனிசாமி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பரமசிவம் வரவேற்றார். மாவட்ட குழு உறுப்பினர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். தமிழக அரசு உயர்த்திய மின் கட்டணத்தால், விசைத்தறி தொழில்கள் அழிவு நிலைக்கு சென்று வருகிறது. ஜவுளி உற்பத்தி தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, மின் கட்டண உயர்வை தமிழக அரசும், மூன்று குற்றவியல் சட்டங்களை மத்திய அரசும் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கோஷமிடப்பட்டது. நிர்வாகிகள் ராஜேந்திரன், முருகேசன், மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
---
பல்லடத்தில், மா.கம்யூ., சார்பில், மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.