Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திருமுறை பண்ணிசை பயிற்சி வகுப்பு துவக்கம்

திருமுறை பண்ணிசை பயிற்சி வகுப்பு துவக்கம்

திருமுறை பண்ணிசை பயிற்சி வகுப்பு துவக்கம்

திருமுறை பண்ணிசை பயிற்சி வகுப்பு துவக்கம்

ADDED : ஜூலை 29, 2024 03:18 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்;திருப்பூரில், திருமுறை பண்ணிசை பயிற்றுவிக்கும், வாராந்திர பயிற்சி வகுப்பு நேற்று துவங்கியது.

திருவையாறு ஐயாறப்பர் திருமுறை மன்றம், திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், திருமுறை பண்ணிசை வகுப்பு நேற்று துவங்கியது. ஒவ்வொரு மாதமும், நான்காவது ஞாயிற்றுக்கிழமை, மாலை, 5:00 மணி முதல், இரவு 7:30 வரை, பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் நல்லசிவம், திருமுறை பண்ணிசை வகுப்பை நடத்துகிறார். பயிற்சி வகுப்பு துவக்க விழா நேற்று, திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள நால்வர் அரங்கில் நடந்தது. விநாயகர் வழிபாடு மற்றும் சிவவழிபாட்டுடன் நிகழ்ச்சி துவங்கியது. டி.எம்.எப்., மருத்தவமனை தலைவர் டாக்டர் தங்கவேல், குமரன் மருத்துவமனை தலைவர் டாக்டர் செந்தில்குமார், சக்தி நர்சிங் ேஹாம் டாக்டர் சக்திவேல், ஏ.கே.ஆர்., கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமிநாராயணன் ஆகியோர், குத்துவிளக்கு ஏற்றி வைத்து, பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தனர்.

பயிற்சி வகுப்பில், குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் பங்கேற்கலாம் என, திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளளனர்.

*

--

தேவாரத் திருமுறை பண்ணிசை வகுப்பு, புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள நால்வர் அரங்கில், துவக்கப்பட்டுள்ளது. அதை, டி. எம். எப். மருத்துவமனை தலைவர் டாக்டர் தங்கவேல், குமரன் மருத்துவமனை தலைவர் டாக்டர் செந்தில்குமரன், தஞ்சை தமிழ்ப்பல்கலை பேராசிரியர் நல்லசிவம் உள்ளிட்டோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us