/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இருக்கிறது... ஆனால் இல்லை பள்ளபாளையம் குளத்துக்கு தண்ணீர் அடைபட்டது ஏன்? இருக்கிறது... ஆனால் இல்லை பள்ளபாளையம் குளத்துக்கு தண்ணீர் அடைபட்டது ஏன்?
இருக்கிறது... ஆனால் இல்லை பள்ளபாளையம் குளத்துக்கு தண்ணீர் அடைபட்டது ஏன்?
இருக்கிறது... ஆனால் இல்லை பள்ளபாளையம் குளத்துக்கு தண்ணீர் அடைபட்டது ஏன்?
இருக்கிறது... ஆனால் இல்லை பள்ளபாளையம் குளத்துக்கு தண்ணீர் அடைபட்டது ஏன்?
ADDED : ஜூலை 29, 2024 03:18 AM

திருப்பூர்;பள்ளபாளையம் குளத்துக்கு, தண்ணீர் திறக்க வேண்டுமென, விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
சாமளாபுரம் பேரூராட்சி எல்லையில், பொதுப்பணித்துறை மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பள்ளபாளையம் குளம் உள்ளது. சாமளாபுரம் குளம் நிறைந்ததும், உபரிநீர் வாய்க்கால் வழியாக தண்ணீர் இக்குளத்துக்கு வந்து சேர்கிறது. இக்குளம் நிறைந்தால், உபரிநீர் மீண்டும் நொய்யலை சென்றடைகிறது.
களிமண் பூமி என்பதால், சாமளாபுரம் குளத்தில், ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது; செந்தேவிபாளையத்தில் இருந்து வரும் வாய்க்காலில், நொய்யல் ஆற்று தண்ணீரும் வந்து சேர்கிறது. குளம் நிறையும் தருவாயில் இருப்பதால், பள்ளபாளையம் குளத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டுமென, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'மேற்கு ரோட்டரி சார்பில், சாமளாபுரம் மற்றும் பள்ளபாளையம் குளம் துார்வாரி ஆழப்படுத்தப்பட்டது. சாமளாபுரம் குளத்தில் தண்ணீர் அதிகம் இருந்தாலும், பள்ளபாளையம் குளத்துக்கு கிடைப்பதில்லை. மீன்பிடி ஏலதாரர்கள், சாமளாபுரம் குளத்துக்கு தண்ணீர் வரும் வாய்க்கால் ஷட்டரை அடிக்கடி அடைத்துவிடுகின்றனர். இதனால், இருகுளங்களுக்கும் தண்ணீர் வருவதில்லை,' என்றனர்.
----
தண்ணீர் வற்றிவரும் பள்ளபாளையம் குளம்.