/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மனுவுக்கு பதிலளித்தால் போதுமா? பணி துவக்குவதல்லவா முக்கியம் மனுவுக்கு பதிலளித்தால் போதுமா? பணி துவக்குவதல்லவா முக்கியம்
மனுவுக்கு பதிலளித்தால் போதுமா? பணி துவக்குவதல்லவா முக்கியம்
மனுவுக்கு பதிலளித்தால் போதுமா? பணி துவக்குவதல்லவா முக்கியம்
மனுவுக்கு பதிலளித்தால் போதுமா? பணி துவக்குவதல்லவா முக்கியம்
ADDED : ஜூலை 14, 2024 11:22 PM
திருப்பூர்;''மனுவுக்கு பதிலளித்தால் மட்டும் போதாது; பாண்டியன் நகர் அரசு பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைந்து செய்துகொடுக்கவேண்டும்'' என்பது பெற்றோர்களின் கோரிக்கை.
திருப்பூர் மாநகராட்சி 2வது வார்டுக்கு உட்பட்ட பாண்டியன் நகரில், அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. நுாற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில், போதிய குடிநீர் வசதி இல்லை; கழிப்பிடங்கள், பழுதடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதான், மாணவர்களும், ஆசிரியர்களும் தவிக்கின்றனர். காரைகள் முழுமையாக பெயர்ந்து எந்நேரம் வேண்டுமானாலும் விழும் ஆபத்தான நிலையில் இப்பள்ளி சுற்றுச்சுவர் உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியிருந்தார்.
பாண்டியன் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சேதமடைந்துள்ள சுற்றுச்சுவர் மற்றும் பயன்படாத நிலையில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி, மாணவ, மாணவியர் பயன்பாட்டுக்கு 10 கழிப்பிடங்கள் கட்டித்தரக்கோரி, தலைமை ஆசிரியரிடமிருந்து கடிதம் பெறப்பட்டுள்ளது. பள்ளி கட்டடங்கள் பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் நிதி ஒதுக்கீட்டில், பாண்டியன் நகர் அரசு உயர்நிலை பள்ளிக்கு முன்னுரிமை அளித்து பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என, சமூக ஆர்வலருக்கு, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.
முதல்வரின் முகவரியில் பெறப்பட்ட மனுவுக்கு பதில் அளித்தாகிவிட்டது என அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிடக்கூடாது. பாண்டியன் நகர் பள்ளிக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகளை விரைந்து செய்துகொடுக்கவேண்டும். ஆபத்தான நிலையில் உள்ள சுற்றுச்சுவரை உடனடியாக இடித்து அகற்றிவிட்டு, புதிய சுவர் கட்டுமான பணிகளை விரைந்து துவக்கவேண்டும்; மாணவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த விஷயத்தில் அதிகாரிகள் அசட்டையாக செயல்படக்கூடாது என்பது பெற்றோரின் கோரிக்கை.