/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அடுத்த குறி சட்டசபை தேர்தல் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - நாம் தமிழர் மாவட்டத்தில் தற்போதிருந்தே முனைப்பு அடுத்த குறி சட்டசபை தேர்தல் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - நாம் தமிழர் மாவட்டத்தில் தற்போதிருந்தே முனைப்பு
அடுத்த குறி சட்டசபை தேர்தல் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - நாம் தமிழர் மாவட்டத்தில் தற்போதிருந்தே முனைப்பு
அடுத்த குறி சட்டசபை தேர்தல் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - நாம் தமிழர் மாவட்டத்தில் தற்போதிருந்தே முனைப்பு
அடுத்த குறி சட்டசபை தேர்தல் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - நாம் தமிழர் மாவட்டத்தில் தற்போதிருந்தே முனைப்பு
ADDED : ஜூன் 30, 2024 12:29 AM

சட்டசபை தேர்தலில் 2026ல் தான் நடக்கப்போகிறது என்றாலும், தற்போதிருந்தே இதற்கான வெற்றி யுத்திகளை அரசியல் கட்சியினர் வகுக்கத் துவங்கியிருக்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில், இது வெளிப்படையாகத் தெரிகிறது.
லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க., மற்றும் கூட்டணிக்கட்சிகள், அனைத்து தொகுதிகளிலும் வென்று சாதனை படைத்தன. அடுத்த கட்டமாக 2026 சட்டசபை தேர்தல் குறித்த பேச்சுகள் ஆரம்பமாகி விட்டன.
திருப்பூர் மாவட்டத்திலும், சட்டசபை தேர்தல் குறித்த விவாதங்கள், யூகங்கள், எதிர்பார்ப்புகள் என தேர்தல் பரபரப்பு குறையாமல் தொடர்ந்து காணப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் ஆறு தொகுதிகள் அ.தி.மு.க., வசம் உள்ளது. இருப்பினும் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க., அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க.,வை பின்னுக்குத் தள்ளி ஓட்டுகளை அள்ளியுள்ளது.
லோக்சபா - சட்டசபை தேர்தல் ஓட்டுகள் விவரம்
* தாராபுரம்: தி.மு.க., வேட்பாளர் 89,986 ஓட்டு பெற்றிருந்தார். தற்போது லோக்சபா தேர்தலில் 95,382 ஓட்டுகளை தி.மு.க., வேட்பாளர் பெற்றார்.* காங்கயம்: தி.மு.க., பெற்றது 94197 ஓட்டுகள். லோக்சபா வேட்பாளர் பெற்றது 95,058.* அவிநாசி: சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., 1.17 லட்சம் ஓட்டுகள் பெற்றது. லோக்சபா தேர்தலில் 55 ஆயிரம். தி.மு.க., பெற்றது 85,129.* மடத்துக்குளம்: சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க, 84,313 ஓட்டு பெற்றது. இது லோக்சபாலனில் 46 ஆயிரமாகி விட்டது. தி.மு.க., 91, 576 ஓட்டு பெற்றது.* உடுமலை: சட்டசபையில் பெற்ற 96,893 ஓட்டுகள், லோக்சபாவில், அ.தி.மு.க.,வுக்கு 44 ஆயிரமாகி விட்டது. தி.மு.க., 93,639 ஓட்டு பெற்றது.* பல்லடம்: சட்டசபை தேர்தலில் 1.26 லட்சம் ஓட்டு பெற்றது அ.தி.மு.க.; லோக்சபாவில் 51 ஆயிரமாக குறைந்து விட்டது. தி.மு.க., 1.14 லட்சம் ஓட்டுகள் பெற்றது.* திருப்பூர் வடக்கு: சட்டசபையில் 1.15 லட்சம் ஓட்டுகள் பெற்ற அ.தி.மு.க., தற்போது 62 ஆயிரமாகி விட்டது. தி.மு.க., கூட்டணி 95,061 ஓட்டுகள் பெற்றுள்ளது.* திருப்பூர் தெற்கு: கடந்த சட்டசபையில் தி.மு.க.,75,535 ஓட்டுகள் பெற்றது, லோக்சபாவில் 75,278 எனக் குறைந்து விட்டது.
தி.மு.க.,வுக்கு ம.நீ.ம., கைகொடுத்ததா?
திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை மேலோட்டமாக பார்க்கும் போது தி.மு.க., லோக்சபா தேர்தலில் அதிக ஓட்டுகளுடன் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஏற்பட்டிருந்தால் அக்கூட்டணி இதை விடக் கூடுதலாக ஓட்டுகள் பெற்றிருக்கும் என்பது வெளிப்படை. குறிப்பாக, பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் அதிகரித்திருக்கிறது. கணிசமாக அனைத்து தொகுதியிலும் புதிய வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தி.மு.க., கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கடந்த முறை தனித்து களம் இறங்கி கணிசமாக ஓட்டுகளைப் பெற்றது. இந்த ஓட்டுகள் எதுவும் தி.மு.க.,வுக்கு கை கொடுக்கவில்லை.
தி.மு.க., மாபெரும் வெற்றியா?
திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை லோக்சபா தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுவிட்டதாக கருதி ஆளும் கட்சியினர் ஓய்வுக்குச் சென்று விட்டால், வரும் சட்டசபை தேர்தல் பெரும் சோதனையாகவே இருக்கும். கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி மக்கள் பணியாற்றுதல்; வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளுதல், நலத்திட்டங்கள் கொண்டு சேர்த்தல் போன்ற பங்களிப்புகள் சட்டசபை தேர்தல் களத்துக்கான அடித்தளமாக கொண்டு செயல்பட வேண்டும்.
இதற்கேற்ப திருப்பூர் மாநகராட்சியில், பணிகள் வேகப்படுத்தப்படுகின்றன. குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தொய்வின்றி செய்து கொடுப்பதில் அக்கறை காட்டப்படுகிறது.
இந்த முறை திருப்பூர் தொகுதியில் ஓட்டுகளில் அ.தி.மு.க., பின்தங்கியதற்கு காரணம், கட்சி நிர்வாகிகளிடம் இருந்த அலட்சியம் முக்கியக் காரணமாக கருதப்படுகிறது. சட்டசபைத்தேர்தலில் வெற்றி முனைப்புடன்தான் நிர்வாகிகள் இருப்பர்.
இதேபோல் அதிகரித்துவரும் ஓட்டு வங்கியைச் சட்டசபைத்தேர்தலில் வெற்றிகரமாக்க பா.ஜ., தற்போதிருந்தே யுத்திகளை வகுக்கிறது. நாம் தமிழர் கட்சியும் சாதிக்கத் துடிக்கிறது. இதற்கேற்ப தி.மு.க., தகவமைத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.