Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக... 

இன்று இனிதாக... 

இன்று இனிதாக... 

இன்று இனிதாக... 

ADDED : ஜூன் 30, 2024 12:29 AM


Google News
ஆன்மிகம்

ஸ்ரீ மத் பாகவதசப்தாஹ மஹோத்சவம்

ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம், ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், காலேஜ் ரோடு, திருப்பூர். பங்கேற்பு: ஈரோடு ஸ்ரீ பாலாஜி பாகவதர். மூலபாராயணம் - காலை 7:00 முதல் 11:30 மணி வரை. ஸ்ரீ பாகவத சப்தாக உபன்யாசம், ப்ரஹலாதன் சரித்திரம் - மாலை, 6:45 முதல் இரவு 8:45 மணி வரை.

உடுக்கை பாடல் நிகழ்ச்சி

ஸ்ரீ அண்ணமார் சுவாமிகளின் சரித்திர உடுக்கைப் பாடல் நிகழ்ச்சி, விக்ரம சோழீஸ்வரர் கோவில் வளாகம், கண்ணபுரம், காங்கயம். இரவு, 8:00 முதல், 11:00 மணி வரை.

மண்டல பூஜை

 ஸ்ரீ பூமிநீளா ஸமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில், திருமுருகன்பூண்டி. காலை 6:00 மணி.

 ஸ்ரீ கரிய காளியம்மன் கோவில், காளிபாளையம், சாமளாபுரம். காலை, 11:00 மணி.

 ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் கோவில், வாய்க்கால் தோட்டம், திருப்பூர். மாலை 6:00 முதல், இரவு, 7:00 மணி வரை.

 ஸ்ரீ தேவி, பூதேவி உடனமர் காரணப் பெருமாள், கருடாழ்வார், ஆஞ்சநேயர் கோவில், காரணம்பேட்டை, பல்லடம். காலை 7:00 மணி.

 விசாலாட்சி உடனமர் விஸ்வநாதர் கோவில், தட்டான் தோட்டம், பல்லடம். காலை 6:00 மணி.

திருவாசகம் உரை

திருவாசகம் முற்றாதல் மற்றும் விளக்கம், சைவர் திருமடம், முத்து ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. சொற்பொழிவாளர்: விஜயமங்கலம் 'அப்பரடிப் பொடி' சொக்கலிங்கம். மாலை, 5:30 முதல் இரவு, 7:30 மணி வரை.

 பொது 

கிராம சபை கூட்டம்

சிறப்பு கிராம சபை கூட்டம், ஊராட்சி அலுவலகம், கருவலுார். அவிநாசி. காலை 11:00 மணி.

கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம், விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகம், கே.செட்டிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: விவேகானந்தா சேவா அறக்கட்டளை. காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

ரத்த தான முகாம்

அன்பு பாலு தோட்டம், அம்மன் நகர் தவமையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ரோட்டரி திருப்பூர் பயனீர்ஸ் சங்கம். காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

இலவச ஆலோசனை

குழந்தையின்மைக்கான இலவச ஆலோசனை முகாம், மாதேஸ்வரி மருத்துவமனை, முத்துசெட்டிபாளையம் மெயின் ரோடு, அவிநாசி. காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

பயிற்சி கருத்தரங்கம்

யோகா, தியானம், மூச்சு பயிற்சி குறித்து பயிற்சியாளர்களுக்கு கருத்தரங்கம், செயல்விளக்கம், டி.ஜே., பார்க், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஹார்ட்புல்னெஸ் அமைப்பு. காலை, 10:00 மணி முதல்.

தொடர் முற்றோதுதல்

பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், பதிக விளக்கம், வரலாற்று முறை விளக்க உரை, திருமுருகநாத சுவாமி கோவில் வளாகம், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: திருப்பூர் சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.

அரங்கேற்ற விழா

திருக்குறள் கும்மி அரங்கேற்ற விழா தனவர்ஷினி அவென்யூ ரிசர்வ் சைட், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: வள்ளி முருகன் கலைக்குழு. மாலை 6:00 மணி.

நடன கலை நிகழ்ச்சி

ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், காட்டுவளவு, தென்னம்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்கூல் ஆப் பைன் ஆர்ட்ஸ். இரவு, 7:15 மணி.

புத்தகத் திருவிழா

ஆர்.பி.எஸ்., மஹால், சீரங்கராயகவுண்டன் வலசு ரோடு, வெள்ளகோவில். கண்காட்சி - காலை 10:00 முதல் இரவு, 10:00 மணி வரை. 'விளக்கிலே திரி நன்கு சமைந்தது' எனும் தலைப்பில் கருத்தரங்கம் - மாலை 6:00 மணி. பங்கேற்பு: எழுத்தாளர் சுமதி. 'வாழ்க்கை வாழ்வதற்கே' எனும் தலைப்பில் கருத்தரங்கம் - மாலை, 6:30 மணி. பங்கேற்பு: பேச்சாளர் சிங்கை ராமச்சந்திரன். ஏற்பாடு: மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை.

யோகா நிகழ்ச்சி

சூரியகிரியா யோகா நிகழ்ச்சி, ஸ்ரீ செந்துார் மஹால், அவிநாசி. ஏற்பாடு: சத்குரு குருகுலம். காலை 6:30 முதல், 8:15 மணி வரை.

 விளையாட்டு 

கிரிக்கெட் போட்டி

ஆறுமுகம் சுழற்கோப்பைக்கான மாவட்ட கிரிக்கெட் போட்டி, டீ பப்ளிக் பள்ளி மைதானம், அவிநாசி. ஸ்டேடியம் பார்க் மைதானம், திருமுருகன்பூண்டி. முதல் லீக் போட்டி - காலை, 10:00 மணி. மற்றொரு போட்டி - மாலை, 3:00 மணி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us