Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நடமாடும் கழிவறைகள் வாடகைக்கு கிடைக்கும்

நடமாடும் கழிவறைகள் வாடகைக்கு கிடைக்கும்

நடமாடும் கழிவறைகள் வாடகைக்கு கிடைக்கும்

நடமாடும் கழிவறைகள் வாடகைக்கு கிடைக்கும்

ADDED : ஜூலை 14, 2024 11:12 PM


Google News
திருப்பூர்;மாநகராட்சி எல்லைக்குள் மொபைல் டாய்லெட் வாகனங்களை மாநகராட்சி நிர்வாகம் வாடகை அடிப்படையில் வழங்குகிறது.

திருப்பூர் மாநகர பகுதியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.கோவில் திருவிழாக்கள், கண்காட்சிகள், பொருட்காட்சிகள், விற்பனை மேளாக்கள் போன்ற நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. அரங்கம், மண்டபம் போன்ற இடங்களில் நடத்தப்படும் போது, அங்கு வருவோருக்கு கழிப்பிட வசதிகள் இருக்கும். வெளியிடங்கள், கழிப்பிட வசதி இல்லாத இடங்களில் நடக்கும்போது, இது பெரும் அவதியை ஏற்படுத்தும். இதற்கு தீர்வு காணும் விதமாக, மாநகராட்சி சார்பில் 4 மொபைல் டாய்லட் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தலா 10 கழிவறைகள் கொண்ட இந்த வாகனங்கள், நிகழ்ச்சி நடத்தும் அமைப்புகளுக்கு வாடகைக்கு விடப்படவுள்ளது. நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் வாடகை என்ற அடிப்படையில் இதைப் பெற்றுப் பயன்படுத்தலாம் என மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 155304 மற்றும் 0421 232 1500 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us