/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஒரு தொகுதியில் 30 அமைச்சருக்கு என்ன வேலை? ஹிந்து முன்னணி கேள்விஒரு தொகுதியில் 30 அமைச்சருக்கு என்ன வேலை? ஹிந்து முன்னணி கேள்வி
ஒரு தொகுதியில் 30 அமைச்சருக்கு என்ன வேலை? ஹிந்து முன்னணி கேள்வி
ஒரு தொகுதியில் 30 அமைச்சருக்கு என்ன வேலை? ஹிந்து முன்னணி கேள்வி
ஒரு தொகுதியில் 30 அமைச்சருக்கு என்ன வேலை? ஹிந்து முன்னணி கேள்வி
ADDED : ஜூலை 14, 2024 11:12 PM
பல்லடம்:''ஒரு சட்டசபை தொகுதியில், 30 அமைச்சர்களுக்கு என்ன வேலை?'' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம், ராயர்பாளையத்தில் நடந்த, ஹிந்து முன்னணி ஊழியர் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பேசியதாவது:
தமிழகத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான ஆட்சி நடந்து வருகிறது. ஹிந்துக்களை இழிவுபடுத்துபவர்களைத்தான் நாம் மீண்டும் ஆட்சியில் அமர வைக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும்.
ஒரு சட்டசபை தொகுதியில்(விக்கிரவாண்டி), 30 அமைச்சர்களுக்கு என்ன வேலை? கோடிக்கணக்கில் செலவழித்து வெற்றி பெற்ற எம்.எல்.ஏ., சும்மாவா இருக்கப் போகிறார்? தேர்தலில் செலவு செய்த பணத்துக்காக மீண்டும் வருமானம் ஈட்டத்தான் பார்ப்பார். மக்கள் சரியானவர்களை தேர்ந்தெடுக்க அவர்களை வழிநடத்திச் செல்ல வேண்டியது ஹிந்து முன்னணியின் பொறுப்பு.
இவ்வாறு அவர் பேசினார்.