ADDED : ஜூலை 14, 2024 11:27 PM

பூச்சக்காடு, ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் மண்டபத்தில் சக்ஷம் அமைப்பு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கைக்கால் அளவீடு முகாம் நடந்தது. மாவட்டத் தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார். செயலாளர் தமிழ்செல்வன், தம்பி நண்பர்கள் நற்பணி மன்ற தலைவர் தம்பி வெங்கடாசலம் முன்னிலை வகித்தனர். முகாமில், 17 பேருக்கு செயற்கை அவயம் அளவிடப்பட்டது.
கண் பரிசோதனை முகாமில், 28 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்ததில், 12 பேரை கண் புரை இலவச அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர். காதொலி டாக்டர் ராம்கார்த்திக் குழுவினர், 18 பேரை பரிசோதித்து, ஆறு பேரை உயர்சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர்.
---
மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கைக்கால் அளவீடு முகாம் நடந்தது.