Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சாலையில் பாய்கிறதே தண்ணீர்!

சாலையில் பாய்கிறதே தண்ணீர்!

சாலையில் பாய்கிறதே தண்ணீர்!

சாலையில் பாய்கிறதே தண்ணீர்!

ADDED : ஜூலை 14, 2024 11:26 PM


Google News
Latest Tamil News
தண்ணீர் வீண்

திருப்பூர், காங்கயம் ரோடு, கனரா வங்கி முன்புறம், குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் வீணாகிறது.

- ரவிசெல்வம், முதலிபாளையம். (படம் உண்டு)

கால்வாய் அடைப்பு

காங்கயம், பாரதியார் வீதியில் கால்வாயில் குப்பை தேங்கியுள்ளது. கழிவுநீர் செல்ல வழியில்லை,

- திவ்யா, பாரதியார் வீதி. (படம் உண்டு)

திருமுருகன்பூண்டி, பூண்டி ரிங் ரோடு, நெசவாளர் காலனியில் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளன.

- மனோகரன், அண்ணா காலனி. (படம் உண்டு)

மின்சாரம் வீண்

திருப்பூர், நெருப்பெரிச்சல், ஜி.என்., கார்டனில் பகலில் உயர்கோபுர மின்விளக்கு எரிந்து மின்சாரம் வீணாகிறது.

- ராஜதுரை, நெருப்பெரிச்சல். (படம் உண்டு)

குப்பை தேக்கம்

திருப்பூர், அங்கேரிபாளையம், லட்சுமி நகரில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். குப்பை தேக்கத்தால், கால்வாயிலும் அடைப்பு ஏற்படுகிறது.

- அன்பு, லட்சுமி நகர். (படம் உண்டு)

பணி மந்தம்

திருப்பூர், மங்கலம் ரோடு, ஹரோ ராமா ஹரே கிருஷ்ணா நகர் இரண்டாவது வீதியில் குழாய் பதிக்க குழி தோண்டி அப்படியே விடப்பட்டுள்ளது. பள்ளி வாகனங்கள் சென்று வர முடியவில்லை.

- சிவக்குமார், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா நகர். (படம் உண்டு)

தண்ணீர் தேக்கம்

கணியாம்பூண்டி ஊராட்சி, வி.ஏ.ஓ., அலுவலகம் அருகில் சாலை அருகே குழியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. வாகன ஓட்டிகள் தவறி விழ வாய்ப்புள்ளது. குழியை மூட வேண்டும்.

- ரஹீம்அங்குராஜ், கணியாம்பூண்டி. (படம் உண்டு)

அனுப்பர்பாளையம் - கணியாம்பூண்டி ரிங் ரோட்டில் உள்ள குழியை மூட வேண்டும். வளைவில் உள்ள குழியால் வாகன ஓட்டிகள் விழுந்து விடும் நிலை உள்ளது.

- விஜயன் அண்ணாமலை, அனுப்பர்பாளையம். (படம் உண்டு)

ரியாக் ஷன்

தரைப்பாலம் அமைப்பு

திருப்பூர், 18வது வார்டு, செல்வ லட்சுமி நகரில், கால்வாய் மேல் தரைப்பாலம் இல்லாததால், வாகனங்கள் சென்று வர சிரமமாக இருந்தது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது.

- சக்திவேல், செல்வ லட்சுமிநகர். (படம் உண்டு)

தற்காலிக தீர்வு

திருப்பூர் பலவஞ்சிபாளையம் பிரிவு பஸ் ஸ்டாப் நிழற்குடை முன் கழிவுநீர் தேங்கி, பயணிகள் பஸ்சுக்கு காத்திருக்க முடியாத நிலை இருந்தது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளது.

- மீனாட்சி சுந்தரம், பலவஞ்சிபாளையம் பிரிவு. (படம் உண்டு)





      Our Apps Available On




      Dinamalar

      Follow us