/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மாநகராட்சி நிர்வாகம் மெத்தனம் விபத்து அதிகரிக்கும் அபாயம்மாநகராட்சி நிர்வாகம் மெத்தனம் விபத்து அதிகரிக்கும் அபாயம்
மாநகராட்சி நிர்வாகம் மெத்தனம் விபத்து அதிகரிக்கும் அபாயம்
மாநகராட்சி நிர்வாகம் மெத்தனம் விபத்து அதிகரிக்கும் அபாயம்
மாநகராட்சி நிர்வாகம் மெத்தனம் விபத்து அதிகரிக்கும் அபாயம்
ADDED : ஜூலை 14, 2024 12:50 AM
பொங்கலுார்;திருப்பூர், கோவில் வழியில் இருந்து பெருந்தொழுவு செல்லும் ரோடு அமராவதிபாளையத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமை மாட்டுச்சந்தை செயல்படுகிறது. சந்தை அருகே புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.
அந்த தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்ல, திருப்பூர் மாநகராட்சி சார்பில் ரோட்டில் குழி தோண்டப்பட்டது. ஓராண்டாகியும், குழியை மூடாமல் மாநகராட்சி அலட்சியம் செய்து வருகிறது. இந்த ரோட்டில், தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கின்றனர்.
குறிப்பாக திருப்பூரிலுள்ள பனியன் நிறுவனங்களுக்கு தினசரி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், கல்லுாரி மாணவர்கள், விவசாயிகள் இரு சக்கர வாகனத்தில் தான் அதிகம் பயணிக்கின்றனர். அமராவதி பாளையத்தை கடக்கும் பொழுது, குழியில் விழுந்து ஏராளமான வாகன ஓட்டிகள் காயம் அடைகின்றனர்.
இது அன்றாட நிகழ்வாக மாறி வருகிறது. எனவே, வாகன ஓட்டிகளை காப்பாற்ற தோண்டிய குழியை உடனடியாக மூட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.