ADDED : அக் 10, 2025 01:04 AM

திருப்பூர், காங்கயம் ரோடு, செயின்ட் ஜோசப் மகளிர் கல்லுாரியில், 21வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கல்லுாரி செயலர் அருள்சீலி, கல்லுாரி முதல்வர் சகாய தமிழ்செல்வி நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சியில், 2021 - 24 வரை பட்டப்படிப்பு முடித்த, 328 இளங்கலை, 19 முதுகலை மாணவியர் என மொத்தம், 347 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
பாரதியார் பல்கலை தரவரிசைப்பட்டியலில் முதலிடம் பெற்ற ஆடை வடிவமைப்புத்துறை மாணவியர் ராஷிதா, ரம்யா ஆகியோருக்கு கல்லுாரி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்கு, 16 மாணவியர் இடம் பெற்றனர். கோவை பாரதியார் பல்கலை சமூகப்பணி துறைத்தலைவர் லவ்லினா லிட்டில்பிளவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.


