ADDED : அக் 10, 2025 01:05 AM

திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில், புகையிலை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் சிவப்பிரகாஷ் துவக்கி வைத்தார். மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெயந்தி உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
எல்.ஆர்.ஜி., கல்லுாரி மாணவியர், போதை பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்; போதை பொருள் பயன்படுத்தக்கூடாது, என்கிற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, ஊர்வலமாக சென்றனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் துவங்கிய ஊர்வலம், எல்.ஆர்.ஜி. கல்லுாரி வரை சென்று திரும்பியது.


