/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வி.ஜி. பாளையத்தில் 630 மரக்கன்று நடவு வி.ஜி. பாளையத்தில் 630 மரக்கன்று நடவு
வி.ஜி. பாளையத்தில் 630 மரக்கன்று நடவு
வி.ஜி. பாளையத்தில் 630 மரக்கன்று நடவு
வி.ஜி. பாளையத்தில் 630 மரக்கன்று நடவு
ADDED : செப் 25, 2025 12:19 AM

திருப்பூர்: 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், விவசாய நிலங்களில், பயனுள்ள வகையில் மரக்கன்று நட்டு வளர்க்க விவசாயிகள் விரும்புகின்றனர். நடப்பு ஆண்டில், மூன்று லட்சம் என்ற இலக்கில், ஏறத்தாழ இரண்டு லட்சத்தை நெருங்கிவிட்டது. வேலி பாதுகாப்பு மற்றும் நீர் வளம் உள்ள நிலத்தில், மரக்கன்று நட்டு வளர்க்கலாம் என, வழிகாட்டுகிறது, வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழு.
பயிர்சாகுபடி செய்வதை காட்டிலும் வருவாய் கொடுக்கும் என்பதால், பயனுள்ள மரங்களை வளர்க்க முன்வருகின்றனர். அதன்படி, பல்லடம் வேலப்பகவுண்டம்பாளையத்தில், தேவராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில், நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டது.
சந்தனம் -330, வேங்கை -150, ஈட்டி -150 என, 630 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. நில உரிமையாளர் குடும்பத்தினர் மற்றும் வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர், மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தனர்.
'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், மரக்கன்றுகளை இலவசமாக நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என, அழைப்பு விடுத்துள்ளனர்.