/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 7 பி.டி.ஓ., 'டிரான்ஸ்பர்'; கலெக்டர் உத்தரவு 7 பி.டி.ஓ., 'டிரான்ஸ்பர்'; கலெக்டர் உத்தரவு
7 பி.டி.ஓ., 'டிரான்ஸ்பர்'; கலெக்டர் உத்தரவு
7 பி.டி.ஓ., 'டிரான்ஸ்பர்'; கலெக்டர் உத்தரவு
7 பி.டி.ஓ., 'டிரான்ஸ்பர்'; கலெக்டர் உத்தரவு
ADDED : செப் 23, 2025 11:55 PM
திருப்பூர் ; திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில், ஏழு பி.டி.ஓ., பணியிட மாறுதல் செய்து, கலெக்டர் மனீஷ் நாரணவரே உத்தரவிட்டுள்ளார்.
அவ்வகையில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (நிர்வாகம்) கண்காணிப்பாளர் ஜோதி, திருப்பூர் பி.டி.ஓ.வாக மாறுதல் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணிபுரியும் அனார்கலி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு கண்காணிப்பாளராக மாற்றப்பட்டார். அங்கு பணிபுரியும் கனகராஜ், பல்லடம் பி.டி.ஓ. (கிராம ஊராட்சி), அங்கு பணிபுரியும் வேலுசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளராகவும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
கலெக்டர் அலுவலக மேலாளர் (வளர்ச்சி) பிரியா, திருப்பூர் 'டான்பிநெட்' வட்டார வளர்ச்சி அலுவலராகவும,; அங்கு பணிபுரியும் பியூலா எப்சிபாய், அவிநாசிக்கு பி.டி.ஓ. ,வாகவும் அங்கு பணி புரியும் ஆறுமுகம், கலெக்டர் அலுவலக மேலாளராகவும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.