/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தொழில் பழகுனர் பயிற்சி திட்டம் 'கிளஸ்டர்' வாரியாக விழிப்புணர்வு தொழில் பழகுனர் பயிற்சி திட்டம் 'கிளஸ்டர்' வாரியாக விழிப்புணர்வு
தொழில் பழகுனர் பயிற்சி திட்டம் 'கிளஸ்டர்' வாரியாக விழிப்புணர்வு
தொழில் பழகுனர் பயிற்சி திட்டம் 'கிளஸ்டர்' வாரியாக விழிப்புணர்வு
தொழில் பழகுனர் பயிற்சி திட்டம் 'கிளஸ்டர்' வாரியாக விழிப்புணர்வு
ADDED : மே 26, 2025 11:59 PM
திருப்பூர்; அரசு மானியத்துடன் கூடிய தேசிய தொழில் பழகுனர் பயிற்சி திட்டம் குறித்து, மும்பை, பெங்களூரு, திருப்பூர் போன்ற 'கிளஸ்டர்' வாரியாக விழிப்புணர்வு ஏற்படுத்த, மத்திய அரசு உத்தர விட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில், தொழிலாளர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், படித்த இளைஞர்களுக்கு, தேசிய தொழில் பழகுனர் பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில், முதலில் வரும், 500 நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்; நடப்பு நிதியாண்டில், 1.25 லட்சம் தொழில் பழகுனருக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
படித்த இளைஞர், இளம்பெண்களுக்கு, தகுதியான வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், தொழிலாளர் மற்றும் பணியாளர் பற்றாக்குறையை போக்கவும் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு, இ.எஸ்.ஐ., மற்றும் பி.எப்., திட்டத்தில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
பட்டதாரி இளைஞர் பயிற்சி பெறும்போது, மாதமாதம் வழங்கும் ஊக்கத்தொகை, 9,000 ரூபாயில், 4,500 ரூபாயை அரசு வழங்கும்; டிப்ளமோ பயிற்சியாளர்களுக்கு, மாதம், 4,000 ரூபாய் அரசு ஊக்கத்தொகை வழங்கும். கடந்த, ஐந்து ஆண்டுகளில், பி.இ., - பி.டெக்., மற்றும் டிப்ளமோ படித்து முடித்தவர்கள், பி.எஸ்.சி., - பி.காம்., - பி.ஏ., - பி.பி.ஏ., மற்றும் ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பயின்றவர்களும் பயன்பெறலாம். சமூக பங்களிப்பு நிதி செலவிடுவதில் முன்னோடியாக இருக்கும் நிறுவனங்களுக்கு, இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், ''மத்திய அரசின் தேசிய தொழில் பழகுனர் பயிற்சி திட்டம் குறித்து, மும்பை, திருப்பூர், பெங்களூரு, சூரத், அகமதாபாத் போன்ற 'கிளஸ்டர்'களில் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது.
ஒவ்வொரு கிளஸ்டரிலும், முன்னோடியாக உள்ள தொழில் அமைப்புகளுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூக பொறுப்பு நிதி வாயிலாக சமுதாய பணிகளை செய்த நிறுவனங்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்,'' என்றார்.