/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மழைக்கால உஷார் நடவடிக்கை மாநகராட்சியில் பா.ஜ., மனு மழைக்கால உஷார் நடவடிக்கை மாநகராட்சியில் பா.ஜ., மனு
மழைக்கால உஷார் நடவடிக்கை மாநகராட்சியில் பா.ஜ., மனு
மழைக்கால உஷார் நடவடிக்கை மாநகராட்சியில் பா.ஜ., மனு
மழைக்கால உஷார் நடவடிக்கை மாநகராட்சியில் பா.ஜ., மனு
ADDED : மே 27, 2025 12:00 AM

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள பா.ஜ., வேண்டுகோள் விடுத்துள்ளது.
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் கவுன்சிலர்கள் குணசேகரன், தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் மேயர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆகியோரிடம் நேற்று அளித்த மனு:
தென்மேற்கு பருவ மழை துவங்கி, நொய்யலில் நீர் வர துவங்கியுள்ளது. மழை தொடரும் நிலையில் நொய்யலில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். ஆனால், ஆறு முழுமையாக துார் வாரப்படாமல் உள்ளது. மாநகராட்சியும் கண்டு கொள்ளாமல் உள்ளது. கரையோரம் வசிக்கும் மக்களுக்கு உரிய எச்சரிக்கை அளிக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்ய வேண்டும்.நொய்யல் ஆற்றை முறையாக கண்காணிக்காவிட்டால் நகரம் இரு பகுதியாக துண்டிக்கப்பட்டு விடும்.
சாதாரணமாக மழை பெய்தால் கூட நகரில் ரோடுகள் பெரும் பாதிப்பை சந்திக்கிறது. பருவ மழையால் தொடர்ந்து நாள் கணக்கில் அவதி நிலவும். மாநகராட்சி பகுதியில் பெரும்பாலான ரோடுகளில் ஏதாவது ஒரு பணிக்கு குழி தோண்டுவது சகஜமாக உள்ளது. இதை முறையாக கண்காணிக்க வேண்டும். குடிநீர் சப்ளையில் பல பகுதிகளில் குறைபாடு உள்ளது. உடைப்புகள் உடனுக்குடன் சரி செய்யாமல் குடிநீர் வீணாகிறது.
மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவு நீர் கால்வாய்கள் முறையாக பராமரிக்க வேண்டும்; மருத்துவமனைகள், மருத்துவ ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். உரிய மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.