/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இணைப்பு ரோட்டில் பாலம்; மக்கள் எதிர்பார்ப்பு இணைப்பு ரோட்டில் பாலம்; மக்கள் எதிர்பார்ப்பு
இணைப்பு ரோட்டில் பாலம்; மக்கள் எதிர்பார்ப்பு
இணைப்பு ரோட்டில் பாலம்; மக்கள் எதிர்பார்ப்பு
இணைப்பு ரோட்டில் பாலம்; மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : செப் 25, 2025 11:54 PM
உடுமலை;உடுமலை ஒன்றியம், ஆலாம்பாளையம் கிராமத்திலிருந்து பள்ளபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கொங்கலக்குறிச்சிக்கு, 3 கி.மீ., தொலைவுக்கு, இணைப்பு ரோடு உள்ளது. அமைந்துள்ளது.
இந்த ரோட்டை கிராம மக்களும், பல்வேறு விளைபொருட்களை எடுத்து செல்ல விவசாயிகளும் பயன்படுத்தி வருகின்றனர். வழித்தடத்தில், பவளபுரம் என்ற குடியிருப்பும் அமைந்துள்ளது.
இந்நிலையில், இணைப்பு ரோட்டில், குறுக்கிடும் மழை நீர் ஓடையில், மழைக்காலங்களில், அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அப்போது, இரு சக்கர வாகனங்கள் ஓடையை கடந்து செல்ல முடிவதில்லை.
ஆலாம்பாளையம் அல்லது மடத்துார் வழியாக, பல கி.மீ., துாரம் சுற்றி கொங்கலக்குறிச்சிக்கு செல்ல வேண்டியுள்ளது. தொடர் மழைக்கு அவ்வழித்தடத்தில், பல வாரங்களுக்கு வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு, தண்ணீர் தேங்கி நின்றது.
எனவே, இப்பிரச்னைக்கு தீர்வாக, ஊரக வளர்ச்சித்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்து பாலம் கட்ட வேண்டும்; இணைப்பு ரோட்டை மேம்படுத்த வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.