/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ காங்கயம் ரோட்டில் காளைகள் உலா; வாகன ஓட்டிகள் - மக்கள் அச்சம் காங்கயம் ரோட்டில் காளைகள் உலா; வாகன ஓட்டிகள் - மக்கள் அச்சம்
காங்கயம் ரோட்டில் காளைகள் உலா; வாகன ஓட்டிகள் - மக்கள் அச்சம்
காங்கயம் ரோட்டில் காளைகள் உலா; வாகன ஓட்டிகள் - மக்கள் அச்சம்
காங்கயம் ரோட்டில் காளைகள் உலா; வாகன ஓட்டிகள் - மக்கள் அச்சம்
ADDED : செப் 24, 2025 12:23 AM

திருப்பூர்; திருப்பூர், காங்கயம் ரோட்டில் சுற்றித்திரியும் கால்நடைகள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.
திருப்பூர் மாநகர பகுதியில், காங்கயம் ரோடு, முனிசிபல் ஆபீஸ் ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, யூனியன் மில் ரோடு, காமாட்சியம்மன் கோவில் வீதி, தென்னம்பாளையம் பகுதிகள், நொய்யல் வீதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய ரோடுகளில் மாடுகள் பெரும் எண்ணிக்கையில் சுற்றித் திரிகின்றன.
கால்நடை வளர்ப்போர் மற்றும் வியாபாரிகள் பலரும் இது போன்ற மாடுகளை தங்கள் இடத்தில் முறையாக கட்டி வைத்து பராமரிப்பதில் அக்கறை காட்டுவதில்லை. அவற்றை ரோடுகளில் சுற்றி மேய விட்டு விடுகின்றனர்.
அவை வாகனப் போக்குவரத்து மிகுந்த ரோடுகளிலும், கடை வீதிகளிலும் இஷ்டம் போல், சுற்றி வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். ரோடுகளில் குறுக்கு நெடுக்கிலும், எதிர் திசையிலும் கூட்டம் கூட்டமாக இவை கடந்து செல்லும் நிலையில் வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. பாதசாரிகள் மாடுகளை கண்டால் அலறியடித்து ஓட்டம் பிடிக்கின்றனர்.
எனவே, கால்நடைகளை ரோட்டில் சுற்ற விடும் அதன் உரிமையாளர்கள் மீது அபராத நடவடிக்கை மேற்கொள்ளுதல், கால்நடைகளை பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகமும், காவல் துறையும் மேற்கொள்ள வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.