Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பேரூராட்சி தலைவரை பதவி நீக்க வேண்டும்; சாமளாபுரத்தில் காத்திருப்பு போராட்டம்

பேரூராட்சி தலைவரை பதவி நீக்க வேண்டும்; சாமளாபுரத்தில் காத்திருப்பு போராட்டம்

பேரூராட்சி தலைவரை பதவி நீக்க வேண்டும்; சாமளாபுரத்தில் காத்திருப்பு போராட்டம்

பேரூராட்சி தலைவரை பதவி நீக்க வேண்டும்; சாமளாபுரத்தில் காத்திருப்பு போராட்டம்

ADDED : செப் 24, 2025 04:57 AM


Google News
Latest Tamil News
பல்லடம்; சமூக ஆர்வலரை கார் ஏற்றி கொலை செய்த சாமளாபுரம் பேரூராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, பேரூராட்சி அலுவலகத்தில், இறந்தவரின் உறவினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமி (தி.மு.க.,). இதே பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பழனிசாமி என்பவரை, முன்பகை காரணமாக, கடந்த, 10ம் தேதி கார் ஏற்றி கொலை செய்ததாக, மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். உயிரிழந்த பழனிசாமியின் குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள், விநாயகா பழனிசாமியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, சாமளாபுரம் பேரூராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பழனிசாமியின் மகன் கார்த்திகேயன் கூறியதாவது:

பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமி, கடந்த, 10ம் தேதி, எனது தந்தையை கார் ஏற்றி கொலை செய்தார். பேரூராட்சி பகுதியில், முறைகேடாக சாலை அமைப்பது குறித்து, கலெக்டரிடம் எனது தந்தை புகார் அளித்ததை தொடர்ந்து, பேரூராட்சித் தலைவர், திட்டமிட்டு கார் ஏற்றி கொலை செய்துள்ளார்.

பொதுவெளியில் நடந்த இச்சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து, விநாயகா பழனிசாமியை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக, கலெக்டரிடம் புகார் அளித்தும், ஆர்ப்பாட்டம் நடத்தியும், அவரை பதவி நீக்கம் செய்வதுடன், குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால், 2 வாரமாகியும் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் என, யாருமே எங்களிடம் விசாரிக்க கூட வரவில்லை. சாமானிய மக்கள் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்வார்களா?

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும், பேரூராட்சியில், இதேபோல், பல்வேறு ரோடு சம்பந்தமான முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்படுவதால், கூடுதல் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, உயிரிழந்த பழனிசாமியின் குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பேரூராட்சி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us