ADDED : பிப் 12, 2024 12:59 AM
வெள்ளகோவில், வட்டமலை கரை ஓடை பகுதியில் மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
அங்கிருந்து தவறி வந்த மான் ஒன்று, தீர்த்தம்பாளையம் பகுதியில் விவசாய நிலத்தில் மாடுகளுடன் மேய்ந்து கொண்டிருந்தது. நேற்று மானை அப்பகுதியில் உள்ள நாய்கள் சில கடித்து துரத்தியுள்ளன. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் நாய்களை விரட்டி, மானை மீட்டனர். பின், வெள்ளகோவில் தீயணைப்பு வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும் காயமடைந்த மான் பரிதாபமாக இறந்தது. வனத்துறையினர் மூலம் அடக்கம் செய்யப்பட்டது.