/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் தேர்வு புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் தேர்வு
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் தேர்வு
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் தேர்வு
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் தேர்வு
ADDED : ஜூன் 15, 2025 09:51 PM

உடுமலை; உடுமலையில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், கற்போருக்கான தேர்வு நேற்று நடந்தது.
உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், உடுமலை நகரம் உட்பட அனைத்து பகுதிகளிலும், 15 வயதுக்கு மேற்பட்ட கல்வியறிவு இல்லாதவர்களுக்கு, அவர்களின் இடத்துக்கு சென்று அடிப்படை கல்வியறிவு அளிப்பதற்காக, புதிய பாரத எழுத்தறிவு எனப்படும் வயது வந்தோருக்கான கல்வியறிவு திட்டம் நடக்கிறது.
ஒவ்வொரு பகுதியிலும், திட்டத்தை செயல்படுத்த பொதுவான கற்போர் மையம் துவக்கப்பட்டு, கல்வி கற்றுத்தர தன்னார்வலர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் நேற்று கற்போருக்கான பொதுத்தேர்வு நடந்தது.
தேர்வுகள், கற்போர் மையங்களாக அமைக்கப்பட்டுள்ள அரசு பள்ளிகளில் காலை, 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடந்தது.
தேர்வில் வாசித்தல், 50 மதிப்பெண்ணுக்கும், எழுதுதல் 50, மற்றும் கணிதம் 50 என மொத்தமாக, 150 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்பட்டன.
பள்ளி தலைமையாசிரியர்கள் முதன்மை கண்காணிப்பாளர்களாகவும், ஆசிரியர் பயிற்றுனர்கள், தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் தேர்வறை கண்காணிப்பாளர்களாகவும் செயல்பட்டனர்.
வினாத்தாள், தேர்வு நாளான நேற்று காலை பிரிக்கப்பட்டு, தேர்வர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தலைமையாசிரியர்கள் வினியோகித்தனர். வட்டார கல்வி அலுவலர்கள் தேர்வு மையங்களை பார்வையிட்டனர்.