/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தென்னைக்கு பசுந்தாள் உரம்; விவசாயிகளிடையே ஆர்வம் தென்னைக்கு பசுந்தாள் உரம்; விவசாயிகளிடையே ஆர்வம்
தென்னைக்கு பசுந்தாள் உரம்; விவசாயிகளிடையே ஆர்வம்
தென்னைக்கு பசுந்தாள் உரம்; விவசாயிகளிடையே ஆர்வம்
தென்னைக்கு பசுந்தாள் உரம்; விவசாயிகளிடையே ஆர்வம்
ADDED : ஜூன் 15, 2025 09:48 PM
உடுமலை; கோடை மழைக்கு பின், தென்னந்தோப்புகளில், பசுந்தாள் உரத்துக்காக சணப்பை விதைத்துள்ளனர்.
உடுமலை வட்டாரத்தில், பிரதானமாக உள்ள தென்னை சாகுபடியில், கடந்தாண்டு சீதோஷ்ண நிலை மாற்றத்தால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. அதிக வெப்பத்தால் மரங்களில், குறும்பல் உதிர்தல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டு, காய்ப்பு திறன் குறைந்தது.
இந்தாண்டு கோடை மழைக்கு பின், தென்னை மரங்களுக்கு உரமிடும் பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, வட்டப்பாத்தியில், சணப்பை விதைத்துள்ளனர். பசுந்தாள் உரமாக பயன்படும் இச்செடிகள் பூத்ததும், மடக்கி உழுவதால், மண்ணுக்கும், மரங்களுக்கும் பல்வேறு சத்துகள் கிடைக்கும்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததும், சணப்பையை மடக்கி உழும் பணிகளை மேற்கொள்வோம். இதனால் மண் வளம் அதிகரித்து, தேங்காய் மகசூலும் அதிகரிக்கும், என தென்னை விவசாயிகள் தெரிவித்தனர்.