ஏ.வி.பி. பள்ளியில் நிறுவனர் தினம்
ஏ.வி.பி. பள்ளியில் நிறுவனர் தினம்
ஏ.வி.பி. பள்ளியில் நிறுவனர் தினம்
ADDED : செப் 23, 2025 11:55 PM

திருப்பூர்; திருப்பூர், திருமுருகன்பூண்டியில் உள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் நிறுவனர், அருள்ஜோதியின், 21வது நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.
இதனையொட்டி, பள்ளி மேலாளர் ராமசாமி, பள்ளியின் சிறப்பம்சங்கள் குறித்து உரையாற்றினார். எட்டாம் வகுப்பு மாணவி விஜயஹாசினி, மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய நற்செயல்கள் பற்றி பேசினார்.
பள்ளி நிறுவனர் அருள்ஜோதியின் உருவச்சிலைக்கு பள்ளியின் முதல்வர் பிரியாராஜா, தாளாளர் கார்த்திகேயன், ஒருங்கிணைப்பாளர் அபிதாபானு, மேலாளர் ராமசாமி, ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் மலரஞ்சலி செலுத்தினர்.