/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ உடுமலை சுகுணா புட்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை உடுமலை சுகுணா புட்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை
உடுமலை சுகுணா புட்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை
உடுமலை சுகுணா புட்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை
உடுமலை சுகுணா புட்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை
ADDED : செப் 24, 2025 04:59 AM

உடுமலை; உடுமலையில் சுகுணா புட்ஸ் நிறுவனத்தில், வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டம், உடுமலையை தலைமையிடமாகக்கொண்டு, சுகுணா புட்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
கறிக்கோழி உற்பத்தி, விற்பனை, கறிக்கோழி ஏற்றுமதி, கோழித்ததீவன உற்பத்தி ஆலைகள் என, ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் அலுவலகங்கள் உள்ளன.
இந்நிலையில், உடுமலை நேரு வீதியிலுள்ள, சுகுணா புட்ஸ் தலைமை நிறுவனத்தில், நேற்று காலை, 11:00 மணிக்கு, வருமான வரித்துறை சிறப்பு பிரிவு கமிஷனர் பெர்ணான்டோ தலைமையில், 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அதே போல், கோட்டமங்கலம் வரதராஜபுரத்திலுள்ள தீவன உற்பத்தி ஆலையில், துணைக்கமிஷனர் ரவீந்திரன் தலைமையில், 12 பேர் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், உடுமலை கணபதிபாளையத்திலுள்ள தீவன உற்பத்தி ஆலையிலும் சோதனை நடக்கிறது.
இந்நிறுவன அலுவலகங்கள், தொழிற்சாலைகளில், காலை துவங்கிய சோதனை இரவு வரை நீடித்தது.