/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சந்திப்பு மேம்பாட்டு பணி நிறைவு தாராபுரம் ரோட்டில் நிம்மதி சந்திப்பு மேம்பாட்டு பணி நிறைவு தாராபுரம் ரோட்டில் நிம்மதி
சந்திப்பு மேம்பாட்டு பணி நிறைவு தாராபுரம் ரோட்டில் நிம்மதி
சந்திப்பு மேம்பாட்டு பணி நிறைவு தாராபுரம் ரோட்டில் நிம்மதி
சந்திப்பு மேம்பாட்டு பணி நிறைவு தாராபுரம் ரோட்டில் நிம்மதி
ADDED : மே 29, 2025 12:26 AM

உடுமலை, ;தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், விபத்துகளை தவிர்க்க சந்திப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், ரோடு சந்திப்பு பகுதிகளில், விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்திப்பு பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு, மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
முதற்கட்டமாக, மாநில நெடுஞ்சாலையில், புதுப்பாளையம் அருகே, அடிவள்ளி, கோழிக்குட்டை ரோடுகள் சந்திக்கும் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
சி.ஆர்.ஐ.டி.பி., சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 3.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாநில நெடுஞ்சாலை மற்றும் கிராம இணைப்பு ரோடுகள் விரிவுபடுத்தப்பட்டது.
இப்பணிகளால், இரு கிராம இணைப்பு ரோடுகளில் இருந்து வரும் வாகனங்கள் எளிதாக தாராபுரம் மாநில நெடுஞ்சாலையுடன் இணைய முடியும்.
மேலும், ரோட்டின் மையப்பகுதியில், ரவுண்டானாவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவு பெற்று தற்போது, ரவுண்டானா வழியாக போக்குரவத்து அனுமதிக்கப்படுகிறது.
சந்திப்பு மேம்பாட்டு பணிகளால் போக்குவரத்து நெரிசல் குறைந்து விபத்துகள் தவிர்க்கப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர். விரைவில், ரவுண்டானாவில் செடிகள் நட்டு பராமரிக்கவும் நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டத்தினர் திட்டமிட்டுள்ளனர்.