/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ லோக் அதாலத்: ரூ. 52 கோடிக்கு சமரசம் லோக் அதாலத்: ரூ. 52 கோடிக்கு சமரசம்
லோக் அதாலத்: ரூ. 52 கோடிக்கு சமரசம்
லோக் அதாலத்: ரூ. 52 கோடிக்கு சமரசம்
லோக் அதாலத்: ரூ. 52 கோடிக்கு சமரசம்
ADDED : ஜூன் 15, 2025 04:05 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நேற்று நடந்த லோக் அதாலத் நிகழ்வில், 3,614 வழக்குகளில் மொத்தம், 52 கோடி ரூபாய் மதிப்பில் சமரசம் ஏற்படுத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று மாவட்டம் முழுவதும் லோக் அதாலத் என்னும் மக்கள் நீதிமன்ற நிகழ்வு நடைபெற்றது. பல்வேறு வழக்குகள் இதில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளும் வகையில், முடிவுக்கு கொண்டு வந்து சமரசம் ஏற்படுத்தப்பட்டது. திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் இந்நிகழ்வை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குணசேகரன் துவக்கி வைத்தார். சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் மோகனவள்ளி முன்னிலை வகித்தார்.
மாவட்டம் முழுவதும் மொத்தம், 21 அமர்வுகளாக வழக்கு விசாரணைகள் நடைபெற்றது. இதில், வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் 458 விசாரிக்கப்பட்டு, 30 கோடி ரூபாய் மதிப்பில் தீர்வு காணப்பட்டது. சிவில் வழக்குகள் 107 விசாரித்து, அதில் 17 கோடி ரூபாய் மதிப்பில் தீர்வு ஏற்படுத்தப்பட்டது. குடும்ப நல வழக்குகள் ஐந்து விசாரித்து அதில், 8 லட்சம் ரூபாய்க்கு சமரசம் ஏற்படுத்தப்பட்டது. சிறு குற்ற வழக்குகள் 2,846 வழக்குகள் விசாரித்து, அதில் 1.77 கோடி ரூபாய் அளவில் தீர்வு ஏற்பட்டது.
காசோலை மோசடி வழக்குகள், 36 விசாரணைக்கு எடுத்து, 1.20 கோடி ரூபாய் மதிப்பில் முடித்து வைக்கப்பட்டது. வங்கி வராக்கடன் வழக்குகள் 162ல், 1.27 கோடி ரூபாய் சமரசம் ஏற்படுத்தப்பட்டது. அவ்வகையில் நேற்று நடந்த நிகழ்வுகளில், மொத்தம், 6,907 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. இதில், 3,614 வழக்குகளில் தீர்வு ஏற்படுத்தி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. மொத்தம், 520 கோடி ரூபாய் மதிப்பில் சமரசம் செய்து தீர்வு காணப்பட்டது.
இந்நிகழ்வில் நீதிபதிகள் பத்மா, பாலு, சுரேஷ், ஸ்ரீதர், செல்லதுரை, ஸ்ரீவித்யா, சுபஸ்ரீ, செந்தில்ராஜா, நதியா பாத்திமா, லோகநாதன், கிருத்திகா மற்றும் வக்கீல் சங்க நிர்வாகிகள், வக்கீல்கள் பங்கேற்றனர்.
---
திருப்பூரில் நடந்த லோக் அதாலத்தில் விபத்து இழப்பீடுக்கான உத்தரவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குணசேகரன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கினார்.