/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கடை ஷட்டரை உடைத்து பணம் திருடிய நபர் கைது கடை ஷட்டரை உடைத்து பணம் திருடிய நபர் கைது
கடை ஷட்டரை உடைத்து பணம் திருடிய நபர் கைது
கடை ஷட்டரை உடைத்து பணம் திருடிய நபர் கைது
கடை ஷட்டரை உடைத்து பணம் திருடிய நபர் கைது
ADDED : செப் 24, 2025 11:36 PM
உடுமலை: உடுமலை அருகே, உரக்கடையின் ஷட்டரை உடைத்து, 6 லட்சத்து 58 ஆயிரத்து 500 ரூபாயை திருடிய நபரை குடிமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
உடுமலை பெதப்பம்பட்டியில், தாராபுரம் கோனப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ், 30 என்பவர் உரக்கடை நடத்தி வருகிறார். கடந்த 11ம் தேதி காலையில், கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு, உள்ளே வைக்கப்பட்டிருந்த 6 லட்சத்து 58 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் 2 கிராம் தங்க நாணயம் திருடு போயிருந்தது. குடி மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
கடந்த 22ம் தேதி ராவணாபுரம் டாஸ்மாக் மதுக்கடை அருகே, சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரை விசாரித்தனர். விசாரணையில், அந்நபர், புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா சித்திரவடங்கம் பகுதியை சேர்ந்த லட்சுமணன்,48, என்பதும் பெதம்பம்பட்டி உரக்கடையில் தங்கநாணயம் மற்றும் ரொக்க பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, லட்சுமணனை குடிமங்கலம் போலீசார் கைது செய்தனர்.