/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ எஸ்-வளைவில் சிக்கிய சுற்றுலா பஸ் மூணாறு ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு எஸ்-வளைவில் சிக்கிய சுற்றுலா பஸ் மூணாறு ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு
எஸ்-வளைவில் சிக்கிய சுற்றுலா பஸ் மூணாறு ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு
எஸ்-வளைவில் சிக்கிய சுற்றுலா பஸ் மூணாறு ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு
எஸ்-வளைவில் சிக்கிய சுற்றுலா பஸ் மூணாறு ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு
ADDED : செப் 24, 2025 11:35 PM

உடுமலை: தமிழக - கேரள மாநிலத்தை இணைக்கும் பிரதான வழித்தடமாக உடுமலை- மூணாறு ரோடு உள்ளது. மூணாறு, மறையூர் என, சுற்றுலா மையங்களுக்கு செல்லும் வாகனங்கள் மட்டுமின்றி, இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அதிகளவு பயன் படுத்தி வருகின்றனர்.
அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த ரோட்டின் இரு புறமும், மண் அரிப்பு காரணமாக மிகப்பெரிய பள்ளங்களாக மாறி, ஆபத்தான நிலையில் உள்ளது. அதே போல், எஸ்-வளைவு மேம்படுத்தப்படாமல் குறுகலாக உள்ளதோடு, பாதுகாப்பு சுவர்கள், கம்பி வேலி உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
நேற்று, காலை ஆந்திரா மாநிலத்திலிருந்து, சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த பஸ், எஸ்-வளைவில் திரும்ப முடியாமல், சிக்கிக்கொண்டது. உடனடியாக உள்ளிருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, கன ரக வாகனங்கள் வாயிலாக மீட்கப்பட்டது.
இதனால், இந்த ரோட்டில், காலை, 6:00 மணி முதல், 9:00 மணி வரை, மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இரு புறமும் ஏரளமான வாகனங்களில், நுாற்றுக்கணக்கான மக்கள் பாதித்தனர். அவசர மருத்துவ தேவைக்காக வந்த ஆம்புலன்ஸ் கூட செல்ல வழியின்றி பாதிப்பு ஏற்பட்டது.
எனவே, உடுமலை- மூணாறு ரோட்டில், இரு புறமும் உள்ள புருவம் பகுதியில் ஏற்பட்டுள்ள ஆபத்தான பள்ளங்களை மேம்படுத்தவும், எஸ்-வளைவில் உரிய மேம்பாடு மற்றும் பாதுகாப்பு பணி மேற்கொள்ளவும், வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.