ADDED : ஜூன் 17, 2025 09:12 PM

உடுமலை; தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க ஆண்டு விழா உடுமலை தேஜஸ் அரங்கில் நடந்தது. விழாவில் சங்க துணைச்செயலாளர் சிவராஜ் வரவேற்றார். தலைவர் மணி தலைமை வகித்தார்.
கவுரவத் தலைவர் நடராஜன், சத்தியம் பாபு முன்னிலை வகித்தனர். செயலாளர் அழகர்சாமி ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ஞான பண்டிதன் வரவுசெலவு அறிக்கை வாசித்தார்.
வாசன் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. தொடர்ந்து புல்லாங்குழல், மிருதங்க இசை நிகழ்ச்சிகளும் நடந்தன.
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.