/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வில்லங்க சான்று இழுத்தடிப்பு; சொத்து உரிமையாளர்கள் தவிப்பு வில்லங்க சான்று இழுத்தடிப்பு; சொத்து உரிமையாளர்கள் தவிப்பு
வில்லங்க சான்று இழுத்தடிப்பு; சொத்து உரிமையாளர்கள் தவிப்பு
வில்லங்க சான்று இழுத்தடிப்பு; சொத்து உரிமையாளர்கள் தவிப்பு
வில்லங்க சான்று இழுத்தடிப்பு; சொத்து உரிமையாளர்கள் தவிப்பு
ADDED : ஜூன் 17, 2025 11:35 PM
பல்லடம்; பல்லடம் சார் பதிவாளர் அலுவலகத்தில், வில்லங்க சான்று வழங்க தாமதிப்பதால், சொத்துக்கள் தொடர்பான பரிவர்த்தனைகள் தடைபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சொத்துக்களை வாங்குவது, விற்பது உள்ளிட்ட நடவடிக்கைகளின்போது, வில்லங்க சான்று பெறுவது அவசியம். இதனால், குறிப்பிட்ட அந்த சொத்தின் உரிமையாளர் யார், தற்போதைய சொத்தின் நிலவரம் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளமுடியும்.
இவ்வாறு, சொத்துப் பரிவர்த்தனையின் போது அவசியமாக உள்ள வில்லங்க சான்றுக்கு விண்ணப்பித்தால் மூன்று நாட்களுக்குள் வழங்க வேண்டும்.
ஆனால், பல்லடம் சார்-பதிவாளர் அலுவலகத்தில், வில்லங்க சான்று வழங்க,10 நாள் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இது குறித்து சார் - பதிவாளர் அலுவலகத்தில் கேட்டால், சர்வர்பிரச்னை என்றே கூறி வருகின்றனர். வில்லங்க சான்று பெறுவதற்கே இவ்வாறு தாமதப்படுத்துவதால், பொதுமக்களுக்கு, தங்கள் மீது நம்பிக்கையின்மை ஏற்படுவதாக பத்திர ஆவண எழுத்தர்கள் புலம்புகின்றனர்.
வில்லங்க சான்று பெற தாமதம் ஏற்படுவதால், சொத்துக்களை வாங்குவது விற்பது உள்ளிட்ட பரிவர்த்தனைகளும் தடைபடுகின்றன.
எனவே, தாமதிக்காமல் வில்லங்க சான்றுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பத்திர ஆவண எழுத்தர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பு.