/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சேமிப்பு கிடங்கு கட்டடம் தரமாக கட்ட வேண்டுகோள் சேமிப்பு கிடங்கு கட்டடம் தரமாக கட்ட வேண்டுகோள்
சேமிப்பு கிடங்கு கட்டடம் தரமாக கட்ட வேண்டுகோள்
சேமிப்பு கிடங்கு கட்டடம் தரமாக கட்ட வேண்டுகோள்
சேமிப்பு கிடங்கு கட்டடம் தரமாக கட்ட வேண்டுகோள்
ADDED : செப் 26, 2025 06:39 AM

பொங்கலுார்; பொங்கலுார் அருகே கட்டப்பட்டு வரும் சேமிப்பு கிடங்கை தரமாக கட்ட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொங்கலுார் ஒன்றியம், நாதகவுண்டம்பாளையத்தில், நுகர்வோர் வாணிப கழகத்துக்கு, பத்து ஆண்டுகளுக்கு முன் பல கோடி ரூபாய் மதிப்பில், 3 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு கட்டப்பட்டுள்ளது.
இப்போது, அதன் மேற்பகுதி சிமென்ட் பூச்சு பெயர்ந்து கீழே விழுந்து வருகிறது. கிடங்கின் அருகில் சென்றாலே உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
அதன் அருகிலேயே, 4.25 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக, 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு கட்டப்பட உள்ளது. இது நுாறு ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நிற்கும் வகையில் தரமாக கட்ட வேண்டும். ஏற்கனவே, கட்டப்பட்ட கிடங்குகளை பராமரிப்பு செய்து இடிந்து கீழே விழுந்து விடாமல் காப்பாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பூமி பூஜை புதிய கிடங்கு கட்ட பூமி பூஜை டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் தலைமையில் நேற்று நடந்தது. கட்டுமான பணிகளை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார். கோவை எம்.பி., கணபதி ராஜ்குமார், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ரகுநாதன், துணை மேலாளர் ஜோக்லின் பாபு, பல்லடம் தாசில்தார் சபரி, ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் பாலுசாமி, பல்லடம் தி.மு.க. செயலாளர் ராஜேந்திரகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல வாவி பாளையம் ஊராட்சி முத்துார் துவக்கப்பள்ளியில் குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 33.04 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக இரண்டு கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
அதனை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.