/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பங்குச்சந்தை லாபம் ஆசை; ரூ.17.68 லட்சம் கைவரிசை பங்குச்சந்தை லாபம் ஆசை; ரூ.17.68 லட்சம் கைவரிசை
பங்குச்சந்தை லாபம் ஆசை; ரூ.17.68 லட்சம் கைவரிசை
பங்குச்சந்தை லாபம் ஆசை; ரூ.17.68 லட்சம் கைவரிசை
பங்குச்சந்தை லாபம் ஆசை; ரூ.17.68 லட்சம் கைவரிசை
ADDED : செப் 25, 2025 12:26 AM
திருப்பூர்: திருப்பூர், மங்கலம் ரோட்டை சேர்ந்தவர், 55 வயது நபர். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பங்குச்சந்தை முதலீடு தொடர்பாக விளம்பரம் வந்தது. அதில், குறைந்த முதலீட்டுக்கு கூடுதல் லாபம் எனக் கூறப்பட்டிருந்தது. இதை நம்பிய அவர், விருப்பம் தெரிவித்தார். பின், சம்பந்தப்பட்ட பங்கு நிறுவனத்தில் இருந்து, இ-மெயில் மூலம் தொடர்பு கொண்டனர். பிரத்யேகமாக, ஐ.டி. உருவாக்கி குழுக்களில் இணைந்தார். தொடர்ந்து, பல்வேறு தவணைகளாக, 17 லட்சத்து, 68 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்தார்.
முதலீடு செய்த பணத்துக்கு லாபம் காட்டியது. அதனை எடுக்க முயன்ற போது, மேலும் பணத்தை கட்டுமாறு அறிவுறுத்தினர். பின் ஏமாற்றப்பட்டதை அறிந்து, அவர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.