/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அ.தி.மு.க. ஆட்சியில் தான் அதிக மருத்துவக்கல்லுாரி வந்தது பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு அ.தி.மு.க. ஆட்சியில் தான் அதிக மருத்துவக்கல்லுாரி வந்தது பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு
அ.தி.மு.க. ஆட்சியில் தான் அதிக மருத்துவக்கல்லுாரி வந்தது பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு
அ.தி.மு.க. ஆட்சியில் தான் அதிக மருத்துவக்கல்லுாரி வந்தது பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு
அ.தி.மு.க. ஆட்சியில் தான் அதிக மருத்துவக்கல்லுாரி வந்தது பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு
ADDED : செப் 25, 2025 12:26 AM
அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் பொதுக்கூட்டம் ஆத்துப்பாளையத்தில் நடைபெற்றது. வார்டு செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:
திருப்பூருக்கு மருத்து வக்கல்லுாரி கனவை நிறைவேற்றி கொடுத்ததும், ஒரே ஆண்டில் இந்தியாவிலேயே, 11 மருத்துவ கல்லுாரிகளை கொண்டு வந்ததும் பழனிசாமிதான்.
தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து என நடந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். குப்பை அள்ளாத மாநகராட்சி என்றால் அது திருப்பூர் மாநகராட்சிதான். மக்களுக்கு நோயை பரப்பி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
எம்.எல்.ஏ. விஜயகுமார், தொகுதி பொறுப்பாளர் தாமோதரன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி உட்பட பலர் பங்கேற்றனர்.