/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குப்பை குவியலுக்கு எப்போது விமோசனம்? குப்பை குவியலுக்கு எப்போது விமோசனம்?
குப்பை குவியலுக்கு எப்போது விமோசனம்?
குப்பை குவியலுக்கு எப்போது விமோசனம்?
குப்பை குவியலுக்கு எப்போது விமோசனம்?
ADDED : மே 27, 2025 12:06 AM

பல்லடம்,; பல்லடம் வட்டாரத்தில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் மிகப்பெரிய ஊராட்சியாக உள்ள கரைப்புதுாரில், குப்பைகளால் குன்று உருவாகி, நாளடைவில் குப்பை மலையாக உருவெடுத்து வருகிறது. கரைப்புதுார் - - உப்பிலிபாளையம் ரோட்டில் உள்ள இந்த குப்பை மலையில், பிளாஸ்டிக் கழிவுகள், கோழி, இறைச்சி, மீன், மருத்துவ மற்றும் கட்டட கழிவுகள் உள்ளிட்ட அனைத்தும் கொட்டப்படுகின்றன. ஊராட்சி குப்பைகள் மட்டுமன்றி தனியார் மூலம் கொட்டப்படும் கழிவுகளால், சுற்றுவட்டார பகுதி மக்கள் வசிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இங்குள்ள ஓடை மாசடைந்துள்ளது. நீர் ஆதாரமும் இதனால் பாதிக்கப்படுகிறது.
பொதுமக்கள் கூறுகையில், 'கரைப்புதுாரில் உள்ள குப்பை மலையை அகற்ற வலியுறுத்தி, சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர் கடந்த ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். விசாரித்த கோர்ட், எட்டு வாரங்களுக்குள் குப்பைகளை அகற்ற காலக்கெடு விதித்தது. இந்த காலக்கெடு முடிந்து பல மாதங்கள் ஆகின்றன. இருப்பினும், குப்பை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை. குப்பை குவியலால், கொசுக்கள் , ஈக்கள் வீடுகளுக்கு படையெடுக்கின்றன. துர்நாற்றம் காரணமாக, இப்பகுதியில், வசிக்கவே இயலாத நிலை உள்ளது. ஐகோர்ட் உத்தரவுக்கு பின்னும், குப்பைகளை அகற்றாதது கவலை அளிக்கிறது' என்றனர்.