ADDED : செப் 26, 2025 06:34 AM
திருப்பூர்; திருப்பூர் தெற்கு தோட்டம், 2வது வீதி, வெடத்தலங்காட்டை சேர்ந்தவர் கவிதா, 34.
குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வர, டூவீலரில் வெளியே சென்றார். அப்போது, பின்னால், டூவீலரில் வந்த, இருவர், கவிதா அணிந்திருந்த, 7 சவரன் நகையை பறித்து சென்றனர். புகாரின் பேரில், சென்ட்ரல் போலீசார் நகை பறித்து சென்ற ஆசாமியை தேடி வருகின்றனர்.