/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கூட்டுறவு அதிகாரியிடம் தகராறு செய்தவர் கைது கூட்டுறவு அதிகாரியிடம் தகராறு செய்தவர் கைது
கூட்டுறவு அதிகாரியிடம் தகராறு செய்தவர் கைது
கூட்டுறவு அதிகாரியிடம் தகராறு செய்தவர் கைது
கூட்டுறவு அதிகாரியிடம் தகராறு செய்தவர் கைது
ADDED : செப் 26, 2025 06:34 AM
திருப்பூர்; திருப்பூர் கூட்டுறவுத் துறை சார்-பதிவாளர் மாரிய ப்பன். நேற்று மதியம் கருவம்பாளையத்தில் உள்ள ரேஷன் கடைக்கு ஆய்வு செய்ய சென்றார் .
பணியில் இருந்த விற்பனையாளர் சுசித்ராவிடம் கடை இருப்பு பதிவேடுகளை பார்வையிட இருந்தார். அங்கு அமர்ந்திருந்த வெளிநபர் குறித்து விசாரித்தார். விற்பனையாளரின் தந்தை ரவி, 51 என்பது தெரிந்தது. வெளி நபர் யாரும் வரக்கூடாது என, அலுவலர் கூறினார். உடனே, அந்த நபர், தான் சமூக ஆர்வலர் என்று கூறி, அதிகாரியிடம் தகராறு செய்துள்ளார். இதனை தொடர்ந்து, சார்-பதிவாளர் புகாரின் பேரில், சென்ட்ரல் போலீசார் வழக்குப்பதிவு செயது ரவியை கைது செய்தனர்.