/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கல்வியியல் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம் கல்வியியல் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்
கல்வியியல் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்
கல்வியியல் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்
கல்வியியல் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்
ADDED : ஜூன் 27, 2024 03:02 AM

செஞ்சி: செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்வியியல் கல்லுாரியில் பி.எஸ்.சி., பி.எட்., இறுதியாண்டு மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் முனைவர் கோவிந்தராஜ் வரவேற்றார். பாக்ஸ்கான், பெகட்ரான் நிறுவனங்களின் மனித வளமேம்பாட்டு அலுவலர்கள் மாணவர்களை தேர்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கல்லுாரி செயலாளர் ஸ்ரீபதி பணி ஆணை வழங்கினார். கல்லுாரி முதல்வர் செந்தில்குமார், திட்ட அலுவலர் உதயகுமார், பேராசிரியர்கள் செந்தில்குமரன், விஜயலட்சுமி, சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.