/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பைக்கில் சென்றவரை தாக்கிய இரண்டு வாலிபர்கள் கைது பைக்கில் சென்றவரை தாக்கிய இரண்டு வாலிபர்கள் கைது
பைக்கில் சென்றவரை தாக்கிய இரண்டு வாலிபர்கள் கைது
பைக்கில் சென்றவரை தாக்கிய இரண்டு வாலிபர்கள் கைது
பைக்கில் சென்றவரை தாக்கிய இரண்டு வாலிபர்கள் கைது
ADDED : ஜூன் 27, 2024 03:03 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பைக்கில் சென்றவரை தாக்கிய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் வி.மருதூர் பகுதியைச் சேர்ந்த கங்காதரன் மகன் ராஜன்பாபு,26; இவர், கடந்த 25ம் தேதி தனது பைக்கில் புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கி, கோலியனூர் பனங்குப்பம் அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது, அதே திசையில் பின்னால் வந்த விழுப்புரம் வில்லியம் லேஅவுட் பகுதியை சேர்ந்த சுந்தர் மகன் சிலம்பரசன்,24; சக்கரவர்த்தி மகன் மோகன், 29; ஆகியோர், முன்னாள் சென்ற ராஜன்பாபுவை, வழிவிடமல் செல்வதாகக்கூறி, தடுத்து நிறுத்தி, திட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்து ராஜன்பாபு கொடுத்த புகாரின் பேரில், வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து, சிலம்பரசன், மோகன் இருவரையும் கைது செய்தனர்.