/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இறந்த வாக்காளர் பெயர்களை நீக்க பா.ம.க., கோரிக்கை இறந்த வாக்காளர் பெயர்களை நீக்க பா.ம.க., கோரிக்கை
இறந்த வாக்காளர் பெயர்களை நீக்க பா.ம.க., கோரிக்கை
இறந்த வாக்காளர் பெயர்களை நீக்க பா.ம.க., கோரிக்கை
இறந்த வாக்காளர் பெயர்களை நீக்க பா.ம.க., கோரிக்கை
ADDED : ஜூன் 27, 2024 11:20 PM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் முன் தொகுதியில், இறந்த 15 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்களை நீக்க வேண்டும் என பா.ம.க., கோரிக்கை விடுத்துள்ளது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் பொறுப்பு மண்டல துணை தாசில்தார் ஆறுமுகத்திடம் அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு அளித்த கோரிக்கை மனு:
விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் அலுவலகத்தில் வரக்கூடிய புகார்களைப் பெற உரிய அதிகாரிகள் இல்லை. இந்த தேர்தலில் ஆளும் கட்சி பல்வேறு தில்லுமுல்லுகளை தேர்தல் விதிமுறை மீறல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் தொகுதியில் தேர்தல் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். நேற்றைய தினம் சுயேச்சை வேட்பாளருக்கு பானைச் சின்னம் தேர்தல் விதிமுறைப்படி ஒதுக்கிய போது அதிகாரியை ஒரு அமைச்சர் மிரட்டியதால் அவர் நெஞ்சு வலி ஏற்பட்டு இன்று அலுவலகத்திற்கு வரவில்லை.
விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர் பட்டியலில் 15000 இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளன.
இடைத்தேர்தல் நடைபெறும் முன்பாகவே இறந்தவர்கள் பெயர்களை நீக்கி தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஓட்டுச் சாவடியில் அவர்களின் பெயர்களை ஒட்டி அறிவிக்க வேண்டும்.
கடந்த லோக்சபா தேர்தலின் போது இறந்தவர்களின் பெயர்கள் இருந்தது. தொகுதியில் 275 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் சராசரியாக 50 பேருக்கு மேல் இறந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் உள்ளது. 15 ஆயிரம் ஓட்டுகள் மிகப்பெரிய ஓட்டுகள் ஆகும்.
இடைத்தேர்தல் என்பதால் ஆளும் தி.மு.க.,வினர் கள்ள ஓட்டுகள் போடுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. நியாயமான, நேர்மையான தேர்தல் நடைபெற விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் அதிகாரிகள் செயல்பட வேண்டும்.
இதுகுறித்து தேர்தல் பார்வையாளருக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் டில்லி தேர்தல் ஆணையத்திற்கும் புகார்கள் தெரிவிப்போம். இந்த தொகுதியில் தேர்தலில் ஆளுங்கட்சியினர் அத்துமீறல் இல்லாத வகையில் நடத்த வேண்டும்.
இந்த புகார் மனு மீது 2 நாட்களில் நடவடிக்கை எடுத்து தேர்தல் ஆணையம் இறந்த 15 ஆயிரம் பெயர்களை நீக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்ட நடவடிக்கை மிகக் கடுமையாக இருக்கும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலாளர் சிவக்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் புகழேந்தி உள்ளிட்ட கட்சியினர் உடனிருந்தனர்.