ADDED : ஜூன் 27, 2024 11:19 PM

வானுார்: உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, ஆரோவில் காவல் நிலையம் சார்பில் குயிலாப்பாளையம் தனியார் மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தாளாளர் குணசீலன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பிரகாஷ், ஆரோவில் சப் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், முத்துகுமார் முன்னிலை வகித்தனர். விழாவில் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் பேசுகையில், 'போதை பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும். அனைவரும் போதை பொருட்களை ஒழிக்க உறுதிமொழியேற்க வேண்டும். போதைப் பொருட்கள் விற்பதையும், பயன்படுத்துவதையும் ஒழிக்க வேண்டும்' என்றார்.
விழாவின், ஒரு பகுதியாக மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் வீரராகு, ரமேஷ் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.