/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மயிலம் பொறியியல் கல்லுாரியில் சாதனையாளர் தின நிகழ்ச்சி மயிலம் பொறியியல் கல்லுாரியில் சாதனையாளர் தின நிகழ்ச்சி
மயிலம் பொறியியல் கல்லுாரியில் சாதனையாளர் தின நிகழ்ச்சி
மயிலம் பொறியியல் கல்லுாரியில் சாதனையாளர் தின நிகழ்ச்சி
மயிலம் பொறியியல் கல்லுாரியில் சாதனையாளர் தின நிகழ்ச்சி
ADDED : ஜூன் 02, 2024 05:18 AM

விழுப்புரம்: மயிலம் பொறியியல் கல்லுாரியில் சாதனையாளர் தினம் கொண்டாடப்பட்டது.
மணக்குள விநாயகர் மற்றும் மயிலம் சுப்ரமணிய சுவாமி கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், வைஷ்ணவி, அறங்காவலர் உறுப்பினர் நிலா பிரியதர்ஷினி, கல்லுாரி இயக்குனர் செந்தில் முன்னிலை வகித்தனர். முதல்வர் ராஜப்பன் வரவேற்றார். வேலைவாய்ப்பு அதிகாரி சதீஷ்குமார், ஆண்டறிக்கை வாசித்தார்.
நேர்முக வளாகத் தேர்வில் 684 பேர் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு, தலைமை வடிவைமப்பு சிந்தனை பள்ளி பேராசிரியர் அன்பு ரத்தினவேல், பணி நியமன ஆணை வழங்கி பேசினார்.
சிறந்த மாணவருக்கான விருதை மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறை இறுதியாண்டு மாணவர் ஷரேயாஸ், மாணவி லாவண்யா பெற்றனர்.
சிறந்த ஆசிரியர் விருதை இணை பேராசிரியர் வெங்கடசாமிக்கு வழங்கப்பட்டது. சிறந்த ஆசிரியை விருது, உதவி பேராசிரியர் செல்வபிரியாவிற்கு வழங்கப்பட்டது.
மயிலம் செவிலியர் கல்லுாரி முதல்வர் தமிழ்ச்செல்வி உட்பட துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.